கங்கை நதியை தூய்மைப்படுத்தும் திட்டத்தை மேம்படுத்த உலக வங்கி சுமார் ரூ.3000 கோடி கடன்
கங்கை நதியை தூய்மைப்படுத்தும் திட்டத்தை மேம்படுத்த, உலக வங்கி சுமார் மூவாயிரம் கோடி ரூபாய் கடன் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.
50 கோடிக்கும் அதிகமான மக்களின் வாழ்வாதாரமாக உள்ள கங்கை நதியின் மாசுபாட்டை தடுப்பது மற்றும் நிர்வாகத்தை வலுப்படுத்தும் நோக்கில் இத்திட்டம் செயல்பட உள்ளது.
கங்கை நதியை தூய்மைப்படுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள ஆணையத்திற்கு உலக வங்கி வழங்கும் கடன் மூலம், நதிக்கரையை ஒட்டியுள்ள நகர்ப்பகுதிகளில் கழிவுநீர் சுத்திகரிப்பு உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட உள்ளது. கடன்தொகையில், சுமார் 2 ஆயிரத்து 800 கோடி ரூபாய் பதினெட்டரை ஆண்டுகள் முதிர்ச்சியைக் கொண்டுள்ளது எனவும், மேலும் அதற்கு 5 ஐந்து ஆண்டு கால கூடுதல் அவகாசம் உள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Comments