விசா கட்டுப்பாட்டினால் இந்திய மாணவர்களுக்கு பாதிப்பு இருக்காது -அமெரிக்கா
விசா கட்டுப்பாடுகளில் இந்திய மாணவர்களின் நலன்கள் கவனத்தில் கொள்ளப்படும் என்று இந்தியாவுக்கு அமெரிக்கா உறுதியளித்துள்ளது.
ஆன்லைன் கல்வி பயின்று வரும் மாணவர்களுக்கு விசாவை நீட்டிக்க முடியாது என்றும், அவர்கள் அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டும் எனவும் டிரம்ப் அரசு அண்மையில் அறிவித்தது. நேரடி வகுப்புகளில் மாணவர்கள் பங்கேற்காவிடின் அவர்களின் விசாக்கள் காலாவதியாகி விடும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்த உத்தரவால் சுமார் இரண்டு லட்சம் இந்திய மாணவர்களும் 4 லட்சம் சீன மாணவர்களும் பாதிக்கப்படுவார்கள்.
இந்நிலையில் வெளியுறவுச் செயலர் ஹர்ஷ் வரதன் அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான துணை அமைச்சர் டேவிட் ஹலேவுடன் இணையவழியாக நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார். இதனைத் தொடர்ந்து இந்திய மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் விசா கட்டுப்பாட்டில் திருத்தம் செய்யப்படும் என்று அமெரிக்கா உறுதியளித்துள்ளது.
Comments