சுமார் ரூ.10 கோடி மின்கட்டணத்தால் விவசாயி அதிர்ச்சி

0 4803

ஜம்மு-காஷ்மீரில் விவசாயி ஒருவருக்கு சுமார் 10 கோடி ரூபாய் மின் கட்டணமாக விதிக்கப்பட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.

பூஞ்ச் மாவட்டத்தின் எல்லை கிராமத்தை சேர்ந்த முகமது ஹனிஃப் என்பவர், 10 கோடியே 8 லட்சத்து 38 ஆயிரத்து 138 ரூபாய் தனக்கு மின்கட்டணமாக வந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

தொடர்ந்து, யூனியன் பிரதேசத்தின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில், கடவுள் தான் இவ்வளவு பெரிய கட்டணத்தை தனக்கு விதித்து இருப்பார் எனவும் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசியுள்ள மின்வாரிய ஊழியர்கள், மின் பயன்பாடு அளவு கணினியில் இருமுறை பதிவிடப்பட்டதால் இந்த தவறு நிகழ்ந்ததாக விளக்கமளித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments