சீனாவின் அரசு அதிகாரிகள் ஆளும் கட்சியினருக்கு அமெரிக்க விசா மறுப்பு
சீனாவின் அரசு அதிகாரிகள் மற்றும் ஆளும் கட்சியினருக்கு அமெரிக்காவில் விசா வழங்க கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ அறிவித்துள்ளார்.
அதிகாரிகளும் சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியினரும் திபெத்தின் பகுதிகளில் வெளிநாட்டவர் வருவதற்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருவது,மனித உரிமை மீறல்களுக்கு இடம் கொடுத்திருப்பதாக மைக் பாம்பியோ விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். ஆசியாவின் முக்கியமான நதிகளில் சுற்றுச்சூழலைக் காக்கத் தவறிவிட்டதாகவும் சீனா மீது அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.
இதனால் சீனாவின் அரசு அதிகாரிகள், கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரிகளுக்கு விசா வழங்கப்படப் போவதில்லை என்று மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.
Comments