கொரோனா தடுப்பு மருந்தை தயாரிக்க அமெரிக்க அரசு தீவிரம்
அமெரிக்காவில் கொரோனா தடுப்பு மருந்தை தயாரிப்பதற்காக இந்திய மதிப்பில் 12 ஆயிரம் கோடி ரூபாயை நோவவேக்ஸ் என்ற உயிரி தொழில்நுட்ப நிறுவனத்திற்கு டிரம்ப் அரசு வழங்கியுள்ளது.
அடுத்து ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் 10 கோடி டோஸ் தடுப்பு மருந்தினை உற்பத்தி செய்ய வேண்டும் என்று அந்த நிறுவனத்திற்கு இலக்கு நிர்ணயிக்ப்பட்டுள்ளது.
அமெரிக்க அரசின் இந்த அறிவிப்பால் நோவவோக்ஸ் நிறுவனத்தின் பங்கு விலை பங்குச்சந்தையில் 35 சதவீதம் அளவுக்கு உயர்ந்தது. தடுப்பு மருந்து தயாரிப்புக்காக ஏற்கனவே ஜான்சன் அண்ட் ஜான்சன், மொடர்னா உள்ளிட்ட நிறுவனங்களுக்கு கோடிக்கணக்கான டாலர்களை டிரம்ப் நிர்வாகம் வழங்கி இருக்கிறது.
அஸ்டிரா ஜெனிகா என்ற நிறுவனம் மனிதர்களுக்கு மருந்தை செலுத்தி சோதனை செய்து வரும் நிலையில், ரிஜெனரான் என்ற நிறுவனம் இறுதி கட்டத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளது.
கொரோனா தடுப்பு மருந்தை தயாரிக்க அமெரிக்க அரசு தீவிரம் | #CoronaVaccine | #America https://t.co/E3apqToOT6
— Polimer News (@polimernews) July 7, 2020
Comments