பிரேசிலில் முகக்கவசம் அணிவதை தவிர ஊரடங்கு உத்தரவுகள் அனைத்தும் நீக்கம்

0 4212

பிரேசில் முகக்கவசம் அணிவதை தவிர்த்து ஊரடங்கு உத்தரவுகள் அனைத்தும் விலக்கி கொள்ளப்பட்டதால் முக்கிய நகரங்கள் அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்பின.

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக 2வது இடத்தில் உள்ள பிரேசிலில், 16 லட்சத்துக்கும் மேற்பட்டோர் நோய் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.

60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்று ஒரு சாதாரண காய்ச்சல், அதற்காக பொருளாதார நடவடிக்கைகளை நிறுத்தி ஊரடங்கு அமல்படுத்த தேவையில்லை என்று தொடக்கத்தில் இருந்தே அதிபர் போல்சனாரோவின் வலியுறுத்தி வந்த நிலையில், போக்குவரத்து, மால்கள், வழிபாட்டுத்தலங்கள், வங்கிகள் உள்ளிட்டவை அனைத்தும் செயல்படும் வகையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments