இந்தியாவில் கொரோனா பாதிப்பு 7.22 லட்சத்தை தாண்டியது

0 1852

இந்தியாவில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 7 லட்சத்து 22 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

மத்திய சுகாதார அமைச்சகம் காலையில் வெளியிட்ட புள்ளி விவரத்தில், நாடு முழுவதும் 7 லட்சத்து 19 ஆயிரத்து 665 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதாக கூறப்பட்டிருந்தது.

இதேபோல் 20 ஆயிரத்து 160 பேர் பலியானதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், உத்தரபிரதேசத்தில் மேலும் 1346 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல் மேலும் 18 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். ஆந்திராவில் மேலும் 1178 பேர் பாதிக்கப்பட்டதோடு, 13 பேர் இறந்துள்ளனர். இதனால் நாட்டில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 7 லட்சத்து 22 ஆயிரத்து 189ஆகவும், பலி எண்ணிக்கை 20 ஆயிரத்து 191ஆகவும் அதிகரித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments