முகக்கவசம், கை சானிடைசர் இனி அத்தியாவசிய பொருள் இல்லை : மத்திய அரசு
முகக்கவசம், கை சானிடைசர் (hand sanitiser) ஆகியவை இனி அத்தியாவசிய பொருள்கள் கிடையாதென மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவ ஆரம்பித்ததும்,அதை தடுக்க மார்ச் 13ம் தேதி முகக்கவசம், சானிடைசர் ஆகியவற்றை 1955ம் ஆண்டு அத்தியாவசிய பொருள்கள் சட்டத்தின்கீழ் 100 நாள்களுக்கு அத்தியாவசிய பொருள்களாக மத்திய அரசு அறிவித்தது.
பதுக்கலை தடுக்கவும், விநியோகத்தை அதிகரிக்கவும் இந்த அறிவிப்பை அரசு வெளியிட்டிருந்தது. இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை செயலாளர் லீனா நந்தன், முகக்கவசம், சானிடைசர் ஆகியவை ஜூன் 30ம் தேதி வரையே அத்தியாவசிய பொருள்களாக அறிவிக்கப்பட்டதாகவும், நாட்டில் தற்போது அவற்றின் விநியோகம் சீராக இருப்பதால், அதை மேலும் நீட்டிக்கவில்லை எனவும் கூறினார்.
மாநில அரசுகளுடன் நடத்திய ஆலோசனைக்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
Comments