ஹாங்காங்கில் இருந்து சில நாட்களில் வெளியேற போவதாக டிக்டாக் அறிவிப்பு
சீனாவின் புதிய பாதுகாப்புச் சட்டம் குறித்த கவலைகளுக்கு மத்தியில் ஹாங்காங்கிலிருந்து சில நாட்களில் வெளியேற உள்ளதாக டிக்டாக் நிறுவனம் அறிவித்துள்ளது.
புதிய சட்டத்தின்படி தேசிய பாதுகாப்புக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியது என கருதும் கருத்துக்களை சமூக வலைதளங்களில் இருந்து நீக்குமாறு உத்தரவிட அரசுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் உத்தரவை மீறும் இணையவழி நிறுவனங்களுக்கும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பகிர்வோருக்கும் இந்திய மதிப்பில் 9 லட்சம் ரூபாய் வரை அபாரதமும், 6 மாதம் சிறைத்தண்டனையும் வழங்கலாம். இதனால் ஏற்படும் பாதிப்புகளை கருத்தில் கொண்டு ஹாங்காங்கில் இருந்து டிக்டாக் நிறுவனம் வெளியேற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனிடையே பயனர்களின் விவரங்களை தர வேண்டும் என்ற ஹாங்காங் அரசின் கோரிக்கையை செயலாக்குவதை பேஸ்புக் உள்ளிட்ட தொழில்நுட்ப நிறுவனங்கள் நிறுத்தி வைத்துள்ளன.
Comments