சென்னையில் குடிசைப் பகுதிகளில் கொரோனா தாக்கம் குறைந்தது
சென்னையில் குடிசைப் பகுதி உள்ளிட்ட மக்கள் அடர்த்தியான பகுதிகளில் கொரோனா வைரசின் தாக்கம் குறைந்துள்ளதாக மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதத்தடன் ஒப்பிடும் போது 30 சதவிதம் என்ற அளவில் இருந்த நிலையில் தற்போது 7 முதல் 10 சதவீதம் என்ற அளவுக்கு கொரோனா வைரஸ் பரவல் குறைந்துள்ளது.
தண்டையார் பேட்டை மண்டலத்தில் மே மாதம் 15 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை பதிவான மொத்த எண்ணிக்கையில் குடிசைப் பகுதிகளில் மட்டும் 17 சதவீதம் பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டு இருந்தது.
ஜூன் ஒன்றாம் தேதி முதல் 15 ஆம் தேதி வரையிலான கால கட்டத்தில் இந்த அளவு 9 சதவீதமாகவும், ஜூலை 5 ஆம் தேதி நிலவரப்படி 10 சதவீதமாகவும் குறைந்துள்ளது. அதே போன்று ராயபுரம் மண்டலத்தில் உள்ள குடிசைப் பகுதிகளில் மே மாதத்தில் 17 சதவீதமாக இருந்த கொரோனா பாதிப்பு ஜூன் மாதத்தில் 6 சதவீதமாகவும், ஜூலை 5 ஆம் தேதி நிலவரப்படி 5.3 சதவீதம் என்ற அளவிலும் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக கவசம் அணிதல், அடிக்கடி கை கழுவுதல், சமூக இடைவெளியை கடைபிடிப்பது குறித்து குடிசைப் பகுதி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தியதால் பாதிப்பு குறைந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சென்னையில் குடிசைப் பகுதிகளில் கொரோனா தாக்கம் குறைந்தது | #Chennai | #Covid19Chennai https://t.co/XksjP2xNQu
— Polimer News (@polimernews) July 7, 2020
Comments