”மொபைல் ஆப்” மூலம் வெட்டுக்கிளிகளின் நடமாட்டம் கண்காணிப்பு
கென்யாவில் வெட்டுக்கிளிகளின் நடமாட்டத்தை mobile app மூலம் விவசாயத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
இதுவரை இல்லாத அளவுக்கு வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு இந்தாண்டு அதிகரித்துள்ளதால், அவற்றை அழிக்க முடிவெடுத்த விவசாயத்துறை அதிகாரிகள், ஐக்கிய நாடுகள் அமைப்பின் உதவியுடன் E-Locusts என்ற மொபைல் application-ஐ அறிமுகப்படுத்தியுள்ளனர்.
இதன்மூலம், பல்வேறு பகுதிகளில் பணியாற்றும் ஊர்க்காவல்படையினர், கூட்டமாககத் திரியும் வெட்டுக்கிளிகளை படம் பிடித்து, அவை அடுத்து செல்லும் திசையை இந்த app-ல் பதிவேற்றம் செய்கின்றனர்.
இந்தத் தகவல்களின் அடிப்படையில், வெட்டுக்கிளிகளின் வருகையை முன் கூட்டியே கணிக்கும் விவசாயத் துறை அதிகாரிகள், அவற்றை அழிக்க பூச்சிக்கொல்லிகளுடன் தயார் நிலையில் உள்ளனர்.
Comments