சரக்கு வாகனங்களுக்கு வரி விலக்கு அளித்தால், அரசுக்கு 1724 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் - தமிழக அரசு
சரக்கு வாகனங்களுக்கு மோட்டார் வாகன வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளித்தால், அரசுக்கு 1724 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
மோட்டார் வாகன வரி செலுத்துவதற்கான காலக்கெடுவை ஜூன் 30ம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு, மே 14ம் தேதி அரசாணை பிறப்பித்தது. இதற்கு தடை விதிக்க கோரி, தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
ஊரடங்கு காரணமாக கனரக வாகனங்கள் இயக்கப்படவில்லை என்பது தவறு எனவும், சரக்கு வாகனங்கள் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு தரப்பில் பதில் அளிக்கப்பட்டது. வரி செலுத்துவதில் இருந்து விலக்களிக்க வேண்டும் என்ற கேள்வியே எழவில்லை என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
Comments