கொரோனா பாதிப்பையும் மீறி டெஸ்லா கார் நிறுவன வர்த்தகம் உயர்வு
பிரபல அமெரிக்க எலக்ட்ரிகல் கார் நிறுவனமான டெஸ்லாவின் பங்கு மதிப்புகள் ஐந்து நாட்களில், இதர பெரிய கார் நிறுவனங்களான ஜெனரல் மோட்டார்ஸ், போர்டு மற்றும் பியட் கிறிஸ்லர் ஆகியனவற்றின் ஒட்டுமொத்த மதிப்பை விடவும் அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிப்பால் சரிந்த டெஸ்லாவின் விற்பனை இந்த இரண்டாவது காலாண்டில் பிரம்மிக்கத்தக்க அளவில் உயர்ந்துள்ளது. இதை அடுத்து பங்கு சந்தையில் டெஸ்லாவுக்கு நாளொன்றுக்கு சுமார் ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 500 கோடி ரூபாய் வர்த்தக வருவாய் அதிகரித்துள்ளது.
கடந்த வாரத்தில் மட்டும் இந்த நிறுவனம் பெற்ற தினசரி வருவாய் பியட் நிறுவனத்தின் மதிப்பையும் தாண்டி விட்டது. கொரோனா காலகட்டத்தில் இதர கார் நிறுவனங்கள் விற்பனையில் பெரிய சவால்களை சந்திக்கும் நிலையில், டெஸ்லா, இரண்டாவது காலாண்டில் 90,650 கார்களை விற்று சாதனை படைத்துள்ளது.
கொரோனா பாதிப்பையும் மீறி டெஸ்லா கார் நிறுவன வர்த்தகம் உயர்வு | #Tesla https://t.co/OKcjSyRHDo
— Polimer News (@polimernews) July 7, 2020
Comments