கான்பூர் போலீசார் கொலைகள் : உ.பி. மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவு

0 1643

கான்பூரில் போலீசார் 8 பேர், ரவுடி, விகாஸ் துபே கும்பலால் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் உத்தர பிரதேச அரசு மாஜிஸ்ட்ரேட் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

60க்கும் அதிகமான குற்றவழக்குகள் உள்ள விகாஸ் துபேயை கைது செய்ய சென்ற டிஎஸ்பி உள்ளிட்ட 8 போலீசாரை கடந்த 3 ஆம் தேதி கான்பூர் அருகே உள்ள கிராமத்தில் விகாஸ் துபே கும்பல் சுட்டு கொன்று விட்டு தப்பி ஓடியது.

ரவுடி கும்பலில் ஒருவன் பிடிபட்ட நிலையில், விகாஸ் துபேக்கு ஒற்றர்களாக செயல்பட்ட 4 போலீசார் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர்.

இதனிடையே போலீஸ் நடவடிக்கையின் போது, விகாஸ் துபே-க்கு உதவியதாக அவனது மருமகள் சாமா, வீட்டு பணியாளர் ரேகா அக்னிஹோதரி, பக்கத்து வீட்டுக்காரர் என 3 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments