பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பை தடை செய்வது தொடர்பாக 4 வாரத்தில் பதில் அளிக்க மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்
தமிழகத்தில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பை நிரந்தரமாக தடை செய்வது தொடர்பான புகாரில் தமிழக உள்துறைச் செயலாளர் மற்றும் டிஜிபி 4 வாரத்தில் பதில் அளிக்க மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது
தூத்துக்குடியைச் சேர்ந்த அதிசயக் குமார் என்பவர் மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அதில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பு பல அத்துமீறல்களில் ஈடுபட்டுள்ளதால் அந்த அமைப்பை நிரந்தரமாக தடை செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக மாநில மனித உரிமை ஆணையம் வழக்குப்பதிவு செய்து தமிழக உள்துறைச் செயலாளர் மற்றும் டிஜிபி ஆகியோர் 4 வாரத்தில் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது.
அதில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பு காவல்துறையில் சட்டபூர்வமாக செயல்படும் அமைப்பா? என்று கேள்வி எழுப்பியுள்ளது. காவல்துறை பணிகளுக்கு பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பை பயன்படுத்துவது மனித உரிமை மீறல் ஆகாதா என்றும் ஆணையம் வினவியுள்ளது.
Comments