திரைப்பட தயாரிப்பை துவக்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும் - அமைச்சர் ஜவ்டேகர்

0 1541

கொரோனா பரவலால் முடங்கி உள்ள திரைப்பட தயாரிப்பை மீண்டும் துவக்குவதற்கான எஸ்ஓபி எனப்படும் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு விரைவில் வெளியிடும் என செய்தி-ஒலிபரப்பு அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் தெரிவித்துள்ளார்.

ஃபிக்கி யின் (FICCI) இந்திய சினிமா குறித்த சர்வதேச கருத்தரங்கில் துவக்க உரை ஆற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.

திரைப்படம், டிவி சீரியல், கோ-புரடெக்சன், அனிமேஷன் மற்றும் வீடியோ கேம் தயாரிப்புக்கு மத்திய அரசு நிதியுதவி செய்யும் என்று கூறிய மத்திய அமைச்சர் பிரகாஜ் ஜவ்டேகர், அதற்கான அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments