சென்னை போல் மதுரையிலும் நடமாடும் வாகனங்கள் மூலம் பரிசோதனை - அமைச்சர் SP வேலுமணி
சென்னையை போல் மதுரையிலும் நடமாடும் வாகனங்கள் மூலம் கொரோனா பரிசோதனையை தீவிரப்படுத்தவுள்ளதாக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக மதுரையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், மதுரையில் அறிகுறி உள்ளவர்களின் சளி மாதிரிகளை சேகரிக்க முதற்கட்டமாக 8 நடமாடும் வாகனங்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று பரிசோதனை செய்து கொள்வதை தவிர்க்க இந்த நடமாடும் திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது எனவும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
மேலும், தேவைக்கேற்ப நடமாடும் மருத்துவ முகாம்கள் மற்றும் வார்டு வாரியாக மருத்துவ முகாம்கள் அதிகப்படுத்துவதற்கான திட்டமும் உள்ளதாக மதுரை மாநகராட்சி தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை போல் மதுரையிலும் நடமாடும் வாகனங்கள் மூலம் பரிசோதனை - அமைச்சர் SP வேலுமணி #MinisterSPVelumani https://t.co/KoYmUyQBqb
— Polimer News (@polimernews) July 7, 2020
Comments