கொரோனா சிகிச்சை: IMPRO மருத்துவப் பொடியை பரிசோதித்து ஆகஸ்ட் 3ஆம் தேதி அறிக்கை
கொரோனா சிகிச்சைக்கு சித்த மருத்துவத்தின் அடிப்படையில் முடக்கத்தான் இலை, வெட்டிவேர், சுக்கு, மிளகு, திப்பிலி உள்ளிட்ட 66 மருத்துவப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கும் IMPRO மருத்துவப் பொடியை பரிசோதித்து, ஆகஸ்ட் 3இல் அறிக்கை தாக்கல் செய்ய மத்திய ஆயுஷ் அமைச்சகத்துக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக மதுரையை சேர்ந்த சித்த மருத்துவர் சுப்ரமணியன் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். இதன்மீதான விசாரணை நிறைவடைந்த நிலையில், நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். ஏற்கனவே IMPRO மருத்துவப் பொடியை பரிசோதிக்க சித்தா மற்றும் ஆயுர்வேத கவுன்சிலுக்கு தமிழக அரசு பரிந்துரைத்துள்ளதாகவும் அதனடிப்படையில் மத்திய ஆயுஷ் அமைச்சகம் பரிசோதித்து, அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர். இந்திய மருத்துவமுறை பரிசோதனைக்கு போதிய நிதி ஒதுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
Comments