சென்னையில் கொரோனா பாதிப்பு மொத்தமாக 70ஆயிரத்தை கடந்தது

0 1545
சென்னையில் மொத்தமாக 70,017 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னையின் 15 மண்டலத்திலும் சேர்த்து, கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 70 ஆயிரத்தை தாண்டியுள்ளது. குணமடைந்தவர்கள் எண்ணிக்கையும் 44ஆயிரமாக அதிகரித்துள்ளது.

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில், சென்னை முழுவதும் 70 ஆயிரத்து 17 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவர்களில் 44ஆயிரத்து882 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

24ஆயிரத்து 52 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 1082 ஆக அதிகரித்துள்ளது.

தேனாம்பேட்டை மண்டலத்தில் 162 பேரும், தண்டையார்பேட்டை மண்டலத்தில் 161 பேரும் உயிரிழந்துள்ளனர்.அதிகபட்சமாக கோடம்பாக்கம் மண்டலத்தில் 2,990 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 58.63% ஆண்களும், 41.76% பெண்களும் ஆவர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments