துபே தொடர்புடைய பாஜக நிர்வாகி கொலை வழக்கில் பிறழ்சாட்சியான 25 போலீசார்

0 1828
கொல்லப்பட்ட பாஜக நிர்வாகியின் சகோதரர் புதிய தகவல்

கான்பூர் காவல்நிலையத்துக்குள் வைத்து பாஜக நிர்வாகியை நிழல் உலக தாதா விகாஸ் துபே  கொலை செய்த வழக்கில்  சாட்சிகளாக இருந்த 25 போலீசார், பிறகு  பிறழ்சாட்சியாக மாறிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அண்மையில் துபேயை கைது செய்ய சென்ற 8 போலீசார் ரவுடிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதையடுத்து அவனை தேடும் பணி தீவிரமாக நடைபெறுகிறது.

இந்நிலையில், காவல்நிலையத்துக்குள் வைத்து 2001ம் ஆண்டில் கொலை செய்யப்பட்ட பாஜக நிர்வாகி சந்தோஷ் சுக்லாவின் சகோதரர் மனோஜ் சுக்லா அளித்த பேட்டியில், அந்த வழக்கில் சரணடைய நீதிமன்றத்துக்கு துபே வருகையில் ஏராளமான அரசியல்வாதிகளும் வந்ததாக கூறியுள்ளார். 

ஆரம்பத்தில் சாட்சிகளாக இருந்த 25 போலீசாரும், பிறகு மாறி விட்டதாகவும், குறிப்பாக விசாரணை அதிகாரியே மாறி விட்டதாகவும் மனோஜ் சுக்லா கூறியுள்ளார். இதில் துபேக்கு தண்டனை கிடைத்திருந்தால், துப்பாக்கி சூடு நடந்திருக்காது எனவும் அவர் கூறியுள்ளார்,

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments