வளைகுடா நாடுகளில் சிக்கித் தவிக்கும் மேலும் 4,500 இந்தியர்கள் மீட்கப்படுவார்கள் - ஸ்பைஸ் ஜெட்

0 1878
வளைகுடாவில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க 25 விமானங்கள் - ஸ்பைஸ் ஜெட்

வந்தேபாரத் திட்டத்தின் கீழ் வளைகுடா நாடுகளில் சிக்கித் தவிக்கும் 4 ஆயிரத்து 500 இந்தியர்கள் அழைத்து வரப்படுவார்கள் என ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

வெளிநாடுகளில் வேலைக்காக சென்ற இளைஞர்கள் லட்சக்கணக்கானோர் கொரோனா அச்சுறுத்தலால் வேலையிழந்துள்ளனர். இந்த சூழலில் இந்தியா வர விரும்பும் அவர்களை மீட்பதற்காக வந்தே பாரத் என்ற திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இதனிடையே கொரோனா தாக்கம் காரணமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா மற்றும் ஓமன் ஆகிய நாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை அழைத்துவர 25 விமானங்களை இயக்க உள்ளதாக ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதில் ராஸ் அல் கைமா, ஜெட்டா, ரியாத் மற்றும் தம்மாம் ஆகிய நகரங்களில் இருந்து ஆயிரம் இந்தியர்கள் மீட்கப்பட்டு அகமதாபாத், கோவா மற்றும் ஜெய்ப்பூருக்குத் திரும்பியுள்ளதாகவும் அந்த நிறுவனம் கூறியுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments