எஸ்எஸ்பி வீரர்கள் இடையே துப்பாக்கிச்சூடு

0 1737
ஒருவரை ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் இருவரும் பலி

காஷ்மீரில் எஸ்எஸ்பி எனப்படும் சசஸ்திர சீமா பல் (sashastra seema bal) படையைச் சேர்ந்த 2 வீரர்கள் ஒருவரை ஒருவர் சுட்டுக்கொண்டு உயிரிழந்தனர்.

குல்காம் மாவட்ட நீதிமன்ற வளாகத்திற்கு அருகிலுள்ள எஸ்.எஸ்.பி முகாமின் பிரதான வாயிலில், ஏ.எஸ்.ஐ சந்தீப் குமார் மற்றும் காவலர் ஹேமந்த் சர்மா ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது, அவர்களிடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில், தாங்கள் வைத்து இருந்த துப்பாக்கிகளால் ஒருவரை ஒருவர் சுட்டதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த துப்பாக்கிச்சூடு தொடர்பாக அப்பகுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments