"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
இஸ்லாமியர்களின் புனித கடமையான ஹஜ் செய்வதற்கு கடும் கட்டுப்பாடுகள்
நடப்பாண்டில் ஹஜ் செய்வோருக்கான கட்டுப்பாடுகளை சவுதி அரசு வெளியிட்டுள்ளது.
இஸ்லாமியர்களின் புனித கடமைகளுள் ஒன்றான ஹஜ்ஜூக்கு ஆண்டுதோறும் 20 லட்சத்துக்கும் அதிகமானோர் வருவது வழக்கம்.
ஆனால் இந்த ஆண்டில் கொரோனா தொற்று காரணமாக ஹஜ் செய்வதற்கு அனுமதி ரத்து செய்யப்பட்டது. பின்னர் உள்நாட்டில் உள்ளர்களுக்கு மட்டுமே ஹஜ் செய்ய அனுமதி என சவுதி அரசு தெரிவித்திருந்த நிலையில் தற்போது அதற்கான கட்டுப்பாடுகளை வெளியிட்டுள்ளது. அதன்படி,இந்த முறை ஹஜ் பயணத்திற்கு சவூதி குடிமக்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு சவுதி குடிமக்கள் அல்லாதவர்கள் முன்னரே சவுதி எல்லைக்குள் வசித்து வந்தால், ஹஜ் பயணத்தில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும் புனித அடையாளமான காபாவை பயணிகள் கையால் தொடுவது தடை செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments