சீன தாக்குதலைச் சமாளிக்க லடாக் எல்லையில் அதிநவீன வாகனங்களை நிறுத்தியுள்ள இந்தியா
லடாக் எல்லையில் சீன ராணுவத்தினரின் நடமாட்டம் மற்றும் தாக்குதலைச் சமாளிக்க அதிநவீன சரத் BMP 2 ரக கவச வாகனங்களை இந்தியா நிறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்குப் பின் இருதரப்பு ராணுவமும் எல்லைப் பகுதியில் ஆயுதங்களைக் குவித்து வருகின்றன. இந்த நிலையில் நவீன ஆயுத அமைப்புகளைக் கொண்ட உலகின் மிகச் சிறந்த போர் வாகனங்களில் ஒன்றான சரத் BMP 2 வாகனத்தை எல்லையில் இந்திய ராணுவம் நிறுத்தியுள்ளது. இந்த வகை வாகனங்கள் ஏவுகணைகள், மோர்ட்டார் குண்டுகள், ராக்கெட்டுகள் மற்றும் இயந்திர துப்பாக்கிகள் மூலம் எதிரி மீது தாக்குதல்களை நடத்தும் திறன் கொண்டவை.
அசுர வேகம், துல்லிய தாக்குதல் திறன்கொண்ட சரத் BMP 2 வாகனங்களை டி.எஸ்.டி.பி.ஓ எனப்படும் Darbuk–Shyok-Daulat Beg Oldi சாலையிலும், கால்வன் பள்ளத்தாக்கின் வாயிலும், டி.பி.ஓ நோக்கிச் செல்லும் சாலையிலும் நிறுத்தப்பட்டுள்ளதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Comments