பாதுகாப்பான முறையில் சந்தைகளில் மீன் விற்பனைக்கு ஏற்பாடு - அமைச்சர் ஜெயக்குமார்

0 1926

சென்னை மாநகரில்,பாதுகாப்பான முறையில் சந்தைகளில் மீன் விற்பனை நடை பெற, தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக மீன் வளத்துறை அமைச்சர் D. ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

கூட்ட நெரிசல் மிகுந்த பகுதிகளில் மீன் விற்பனையை எவ்வாறு தொடங்குவது? என்பது குறித்து சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்குப்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாதுகாப்பான விற்பனைக்காக ஒவ்வொரு மீன் மார்க்கெட்டிற்கும் ஒரு தனி குழு அமைக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.

ஒவ்வொரு மார்க்கெட்டின் நுழைவு வாயிலிலும் சானிடைசர் வைக்க வேண்டும் என அறிவுறுத்திய அமைச்சர் ஜெயக்குமார், முக கவசம் அணியாமல் யாரையும் அனுமதிக்க கூடாது என கேட்டுக்கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments