அதிநவீன செயற்கைக்கோளை விண்ணில் செலுத்திய இஸ்ரேல்
எதிரி நாடுகளை துல்லியாமாக கண்காணிக்கும் அதிநவீன செயற்கைக்கோளை இஸ்ரேல் அரசு விண்ணில் ஏவியுள்ளது.
ஈரான் அரசு அணு ஆயுத சோதனையில் ஈடுபடுவதை, பெரும் அச்சுறுத்தலாக கருதும் இஸ்ரேல், எதிரி நாடுகள் மீதான கண்காணிப்பை தீவிரப்படுத்தும் முயற்சியில் களமிறங்கியுள்ளது.
இதையடுத்து, அதிநவீன தொழில்நுட்பங்களுடன், காட்சிகளை துல்லியமாக படம் பிடித்து பூமிக்கு தொடர்ந்து அனுப்பும் வல்லமை படைத்த Ofek 16 செயற்கைகோளை, Shavit விண்கலம் மூலம் இஸ்ரேல் விண்ணில் செலுத்தியுள்ளது.
ஒரு வாரத்தில் அந்த செயற்கைகோள், ஈரான் உள்ளிட்ட எதிரி நாடுகளின் நடவடிக்கைகளை படம் பிடித்து பூமிக்கு அனுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Comments