இருட்டுக்கடை அல்வா போல பாப்புலரான மயிலாப்பூர் ஜன்னல் பஜ்ஜிகடை உரிமையாளர் கொரோனாவுக்கு பலி

0 25056

நெல்லையில் மிகவும் பாப்புலரான இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் ஹரிசிங்கை கொரோனா தாக்கியது. இதனால், பயந்து போன ஹரிசிங் தற்கொலை செய்து கொண்டது தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இருட்டுக்கடை அல்வா போல சென்னை மயிலாப்பூரில் ஜன்னல் பஜ்ஜி கடையும் மிகவும் பாப்புலரானது. இந்த கடை பொன்னம்பல வாத்தியார் தெருவில் அமைந்துள்ளது. கடையின் உரிமையாளர்களுல் ஒருவர் ரமேஷ் என்ற சிவராமகிருஷ்ணன்( வயது 58). ஒற்றை ஜன்னலுக்குள் அமர்ந்து கொண்டு தன் சகோதரர் சந்திரகேகருடன் சேர்ந்து இவரும்  பஜ்ஜி ,வடைகளை விற்பனை செய்வார். இவரின் கடையில் தயாரிக்கப்படும் பஜ்ஜி, வடை, போண்டா, மிளகாய் பஜ்ஜி மிகுந்த சுவையாக இருக்கும். அதோடு, இங்கு பரிமாறப்படும் சாம்பார் மற்றும் சட்னி ரகங்களும் அருமையான சுவையுடன் இருக்கும்.

image

இதனால், எப்போதும் ஜன்னல் பஜ்ஜிக்கடையில் மக்கள் கூட்டம் அலைமோதும். மயிலாப்பூரின் அடையாளமாகவே ஜன்னல் பஜ்ஜி கடை கருதப்பட்டது. கடையை விரிபடுத்தும் வகையில் விற்பனை இருந்தும் வாடிக்கையாளர்கள் கூட்டம் அலை மோதியும் கடைசி வரை ஜன்னல் ஓரத்தில் இருந்தே பஜ்ஜியை ரமேஷ் விற்பனை செய்து வந்தார்.

இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன், ஜன்னல் பஜ்ஜிக்கடை உரிமையாளர் ரமேசுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரமேஷ் மரணமடைந்து விட்டார். இதனால், மயிலாப்பூர் மக்கள் மிகுந்த வேதனையடைந்துள்ளனர்.

மயிலாப்பூருக்கு செல்பவர்கள் கபாலீசுவரர் கோயிலருகேயுள்ள ஜன்னல் பஜ்ஜி கடையில் ஒரு முறையாவாது சாப்பிடாமல் திரும்பியிருக்க மாட்டார்கள். வாடிக்கையாளர்களிடத்தில் கனிவுடனும் அன்புடன் நடக்கும் ரமேஷையும் எளிதில் மறந்து விட முடியாது. ரமேஷின் மறைவையடுத்து ஜன்னல் பஜ்ஜி கடை அடைக்கப்பட்டுள்ளது.20  ஆண்டுகளாக ஜன்னல் பஜ்ஜி கடை இயங்கி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

குடும்பத்தினர் கூறுகையில், ''எங்களுக்கு எல்லாவிதத்திலும் அவர் உதவியாக இருந்தார். ஆடிட்டர் பணி புரிந்து கொண்டே தன் சகோதரர் சந்திரசேகருக்கு பஜ்ஜி கடையில் உதவியாகவும் இருந்தார். அவரின் மறைவை எப்படி ஈடுகட்ட போகிறோம் என்று தெரியவில்லை. இன்னும் ஒரு மாதத்துக்கு பிறகு நாங்கள் கடை திறக்க முடிவு செய்துள்ளோம்'' என்றனர். 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments