11, 12ஆம் வகுப்புகளுக்கு புதிய பாடத் தொகுப்புத் திட்டம் ரத்து - மு.க.ஸ்டாலின் வரவேற்பு
11, 12ஆம் வகுப்புகளுக்கு அறிமுகம் செய்யவிருந்த புதிய பாடத் தொகுப்புத் திட்டம் ரத்து செய்யப்பட்டுப் பழைய முறையே தொடரும் என்ற அறிவிப்புக்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், குளறுபடியானது - ரத்து செய்ய வேண்டும் என தான் கோரியிருந்த புதிய பாடத் தொகுப்பை இப்போதாவது ரத்து செய்வதை வரவேற்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
முடிவுகளை அவசரமாக அறிவித்துவிட்டு பின்னர் திரும்பப் பெறுவதே அரசுக்கு வழக்கமாகிவிட்டது என்றும், மாணவர்களின் எதிர்காலம் சார்ந்த முடிவிலும் அலட்சியமா? என்றும் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
Comments