கோல் இந்தியா-என்எல்சி இணைந்து 5000 மெகாவாட் மின்னுற்பத்தி செய்யத் திட்டம்
கோல் இந்தியா, என்எல்சி இணைந்து 12 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் மூவாயிரம் மெகாவாட் சூரியஒளி மின்னுற்பத்தித் திட்டத்தைச் செயல்படுத்த உள்ளன.
அரசுத் துறை நிறுவனங்களான கோல் இந்தியா - என்எல்சி ஆகியன இணைந்து சூரிய ஒளி மின், அனல் மின் திட்டங்கள் மூலம் ஐயாயிரம் மெகாவாட் மின்னுற்பத்தி செய்யத் திட்டமிட்டுள்ளன.
இதில் இரண்டாயிரம் மெகாவாட் மின்சாரம் அனல் மின்னுற்பத்தித் திட்டமாகும். சூரிய ஒளி மின் திட்டத்தில் மூவாயிரம் மெகாவாட் மின்னுற்பத்தி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ஒரு கூட்டு நிறுவனத்தைத் தொடங்குவதற்கான செயல்பாடு நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்போதைய நிலவரப்படி சூரிய ஒளி மின்னுற்பத்தி முறையில் ஒரு மெகாவாட் மின்னுற்பத்தி செய்ய 4 கோடி ரூபாய் முதலீடு தேவை எனக் கணக்கிடப்பட்டுள்ளதால் இரு நிறுவனங்களும் மொத்தம் 12 ஆயிரம் கோடி ரூபாயை இந்தத் திட்டத்துக்காக முதலீடு செய்ய உள்ளன.
Comments