இந்தியர்கள் 15 சதவிகிதம் பேருக்கே குவைத்தில் அனுமதி ... 8 லட்சம் பேர் வேலை இழக்கும் பரிதாபம்!

0 7077

கொரோனா வைரஸ் காரணமாக உலகமே பொருளதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. குவைத் போன்ற வளைகுடா நாடுகளில் பெட்ரோல்தான் முக்கிய பொருளாதார ஆதாரம். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவை சந்தித்ததால், தற்போது குவைத்திலும் வேலை வாய்ப்பின்மை அதிகரித்துள்ளது.

குவைத்தின் மக்கள் தொகை 48 லட்சம் ஆகும். அதில் குவைத்தியர்கள் 13 லட்சம் பேர் மட்டுமே . 34.80 லட்சம் பேர் வெளிநாட்டிலிருந்து வந்து அந்த நாட்டில் பணி புரிபவர்கள். இந்தியர்கள் மட்டும் 14 லட்சம் பேர் அதிகபட்சமாக இந்த நாட்டில் வசிக்கிறார்கள். கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, குவைத் நாட்டிலும் உள்ளூர்வாசிகளுக்கு வேலை வாய்ப்பில் முக்கியத்தும் கொடுக்க அந்த நாடு முடிவெடுத்துள்ளது. இதற்காக, புதிய சட்டதிருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

தற்போது, குவைத் மக்கள் தொகையில் 70 சதவிகிதம் பேர் வெளிநாட்டவர்கள். இதை, 30 சதவிகிதமாக குறைக்க குவைத் பிரதமர் ஷேக் சபாத் அல் காலீத் அல் சபா முடிவு செய்துள்ளார். புதிய சட்டத்தின்படி , குவைத் மக்கள் தொகையில் 15 சதவிகிதத்துக்கு அதிகமாக இந்தியர்கள் வசிக்க கூடாது என்றும்  சொல்லப்பட்டுள்ளது. இதனால், தற்போதுள்ள 14 லட்சம் இந்தியர்களில் 8 லட்சம் பேர் குவைத் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய சூழல் உருவாகும்.

குவைத் நாடாளுமன்றத்தில் ஐந்து உறுப்பினர்களால் புதிய சட்டதிருத்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது. குவைத் நாடாளுமன்றமும் சட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது. நாடாளுமன்ற நிலைக்குழு புதிய சட்ட வரைவை இறுதி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது. சட்ட திருத்தம் இறுதி வடிவம் பெற்றால் , மொத்தம் 25 லட்சம் வெளிநாட்டவர்கள் குவைத்திலிருந்து வெளியேற்றப்படுவார்கள்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments