தென்சீனக் கடலில் அமெரிக்க விமானந்தாங்கிக் கப்பல்கள்..!
தென்சீனக் கடல் பகுதியில் போர்ப்பயிற்சிக்காக இரண்டு விமானந்தாங்கிக் கப்பல்களை அனுப்பியுள்ளதாக அமெரிக்கக் கடற்படை டுவிட்டரில் தெரிவித்துள்ளது.
தென்சீனக் கடல் பகுதியில் தன்னுடைய மேலாண்மையை நிறுவச் சீனா முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
தென்சீனக் கடல் பகுதி முழுவதும் சீன ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும், அங்கு விமானந்தாங்கிக் கப்பல்களைத் தாக்கி அழிக்கும் ஏவுகணைகளை நிறுத்தியுள்ளதாகவும் சீனாவில் இருந்து வெளியாகும் குளோபல் டைம்ஸ் நாளேட்டில் செய்தி வெளியாகி இருந்தது.
இதற்குப் பதிலாக அமெரிக்கக் கடற்படை டுவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளது. அதில் தென்சீனக் கடலில் பன்னாட்டுக் கடற்பரப்பில் யுஎஸ்எஸ் நிமிட்ஸ், யுஎஸ்எஸ் ரொனால்டு ரீகன் ஆகிய 2 விமானந்தாங்கிக் கப்பல்களும் போர்ப் பயிற்சியில் பங்கேற்க நிற்பதாகக் குறிப்பிட்டுள்ளது.
Comments