பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் பழைய நடைமுறையின்படியே பாடத்திட்டங்களை தேர்வு செய்யலாம் - தமிழக அரசு

0 3501
மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான ஏற்கனவே உள்ள நடைமுறையில் பாடத் திட்டம் தொடரும் - தமிழக அரசு

தமிழகத்தில் 11, 12ஆம் வகுப்புகளில் நடப்புக் கல்வியாண்டில் அறிமுகம் செய்யவிருந்த புதிய பாடத் தொகுப்புத் திட்டம் ரத்து செய்யப்பட்டுப் பழைய முறையே தொடரும் எனப் பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

11, 12ஆம் வகுப்புகளில் 6 பாடங்கள் மற்றும் 5 பாடங்கள் என்று இருவகைப் பாடத் தொகுப்புத் திட்டம் நடப்புக் கல்வியாண்டில் அறிமுகம் செய்யப்படவிருந்தது.

இதில், 5 பாடங்கள் அடங்கிய தொகுப்பில் சேர்ந்தால், உயர்கல்வியில் பாதிப்பு ஏற்படும் எனக் கல்வியாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இதையடுத்து, 5 பாடங்கள் அடங்கிய தொகுப்பு ரத்து செய்யப்படுவதாகப் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதனால் தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிப் பாடங்களுடன் 4 முதன்மைப் பாடங்கள் இடம்பெறும் பழைய முறையே தொடரும் எனப் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments