மூன்றாண்டு MCA படிப்பு 2 ஆண்டு படிப்பாக மாற்றம்

0 2907

மூன்றாண்டு எம்சிஏ படிப்பை, 2 ஆண்டு படிப்பாக  மாற்றம் செய்து அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்கழகம் அறிவித்துள்ளது.

எம்சிஏ என சுருக்கமாகக் குறிப்பிடப்படும் "மாஸ்டர் ஆஃப் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்", மூன்று ஆண்டுகள் படிப்பாக உள்ளது. பொதுவாக முதுநிலை பட்டப் படிப்புகள் இரண்டு ஆண்டுகளாக உள்ள நிலையில், எம்சிஏ மட்டும் மூன்று ஆண்டுகள் படிப்பாக உள்ளது.

ஓராண்டு கூடுதலாக செலவிட வேண்டிய நிலை இருப்பதால், அதையும் இரண்டு ஆண்டுகளாக குறைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் இருந்தன. இதற்கு, பல்கலைக்கழக மானியக் குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இதற்கேற்ப புதிய பாடத்திட்டம் 2020-21 கல்வி ஆண்டு முதல் அமலுக்கு வரும் என்று அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்கழகம் அறிவித்துள்ளது.

B.Sc., BCA, B.Com., உள்ளிட்ட இளங்கலை படிப்புகளில் தேர்ச்சி பெற்றவர்கள் நேரடியாக MCA படிப்பில் சேரலாம். கடந்த ஆண்டில் MCA படிப்பில் சேர்ந்தவர்களுக்கு எந்த மாற்றமும் இருக்காது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments