கான்பூர் படுகொலை-காவல்துறையைச் சேர்ந்த ஒருவரே ரவுடிகளுக்குத் தகவல் கொடுத்தது அம்பலம்
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் எட்டு போலீஸ்காரர்களை சுட்டுக் கொன்ற சம்பவத்தில் காவல்துறையை சேர்ந்த சிலரும் அரசியல்வாதிகள் சிலரும் ரவுடிகளுக்கு ரகசியமாக உதவியதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேற்று விகாசின் கூட்டாளி தயாசங்கர் என்பவன் போலீசாரிடம் சிக்கியதில் அவனிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. தயாசங்கர் வாக்குமூலத்தில் 50 போலீசார் கொண்ட படை ஒன்று ரவுடிகளைப் பிடிக்க வருவதாக காவல்துறையைச் சேர்ந்த ஒருவரே விகாசுக்குத் தகவல் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளான்.
இதனால் உஷாரான ரவுடிகள் 30 பேர் மூன்று இடங்களில் இருந்து போலீசார் மீது சரமாரியாகத் தாக்குதல் நடத்தியதால் உயிர்ச்சேதம் அதிகளவில் ஏற்பட்டுள்ளது. மேலும் போலீசார் ரவுடிகளைப் பிடிக்கச் சென்றபோது அரசியல் கட்சி பிரமுகர் ஒருவரின் உத்தரவின் பேரில் அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதும் திட்டமிட்ட சதியாக கருதப்படுகிறது.
இச்சம்பவத்தையடுத்து குற்றவாளிகள் தப்பிவிடாமல் இருக்க மாநில எல்லைகள் மூடப்படும் முன்பே விகாஸ் வேறு மாநிலத்துக்கு தப்பிச் சென்றிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.விகாசுடன் தொடர்புகொண்ட அரசியல்கட்சி பிரமுகர்கள், காவல்துறையினர் குறித்த விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
புல்டோசரால் விகாஸ் வீடு இடித்துத் தள்ளப்பட்டதில் அந்த வீட்டில் இருந்த ஏராளமான வெடிகுண்டுகள், துப்பாக்கிகள் போன்ற ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ரவுடி கும்பலின் தலைவன் விகாஸ் துபேயை பிடிக்க 25 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன
Comments