வீடு வீடாக மின்பயன்பாடு கணக்கிடும் பணி மீண்டும் தொடக்கம்
தமிழகத்தில் வீடு வீடாக சென்று மின்சார பயன்பாட்டினை அளவிடும் பணி இன்று முதல் மீண்டும் தொடங்குகிறது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், ஏப்ரல் மற்றும் மே மாதத்திற்கான மின் பயன்பாடு கணக்கிடும் பணிகள் ஜூன் மாதத்தில் தொடங்கப்பட்டது.
இதனிடையே, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பரவலை தடுக்க ஜூன் 19ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதைதொடர்ந்து, மாநிலம் முழுவதும் மின் பயன்பாட்டினை கணக்கிடும் பணி நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், நேற்றுடன் முழு ஊரடங்கு நிறைவடைந்ததை ஒட்டி, இன்று முதல் மின் பயன்பாடு கணக்கிடும் பணியை மேற்கொள்ள மின்வாரிய ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
வீடு வீடாக மின்பயன்பாடு கணக்கிடும் பணி மீண்டும் தொடக்கம் #TamilNadu | #Electricity | #EBBill https://t.co/DYvWiuLUBa
— Polimer News (@polimernews) July 6, 2020
Comments