தமிழகம் முழுவதும் நேற்று தளர்வுகளற்ற முழு ஊரடங்கு
தமிழகம் முழுவதும் நேற்று தளர்வுகள் ஏதுமற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், மருத்துவமனைகள், மருந்தகங்கள், பால் விற்பனை நிலையங்கள் தவிர, அத்தியாவசியக் கடைகள் உட்பட மற்ற அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.
தமிழகத்தில் கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் சூழலில், சென்னையைப் போன்றே ஒவ்வொரு ஞாயிறும் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு மாநிலம் முழுவதும் அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்தது.
அதன்படி நேற்றைய முழு ஊரடங்கின் போது, பால் விற்பனை நிலையங்கள், மருந்தகங்கள் மருத்துவமனைகள் மட்டுமே திறக்கப்பட்டிருந்தன. காய்கறி, மளிகை கடைகள், பெட்ரோல் பங்குகள் உட்பட அனைத்து அத்தியாவசியக் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. சாலைகளில் வாகனப் போக்குவரத்து பெருமளவு குறைந்திருந்தது. அனுமதிக்கப்பட்ட பணிகளுக்கு செல்வோரையும் ஆங்காங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதித்தனர்.
தமிழகம் முழுவதும் நேற்று தளர்வுகளற்ற முழு ஊரடங்கு #SundayFullLockdown #TNFullLockdown https://t.co/nopxS5gOmy
— Polimer News (@polimernews) July 6, 2020
Comments