உலக அளவில் 1.15கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு
உலக அளவில் புதிதாக ஒரு லட்சத்து 75ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதால், இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு கோடியே 15 லட்சத்தை கடந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் பல்வேறு நாடுகளில் 3ஆயிரத்து572 பேர் கொரோனாவுக்கு பலியானதால், அந்த எண்ணிக்கையும் 5 லட்சத்து 36ஆயிரமாக அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் ஒரே நாளில் 44ஆயிரம் பேருக்கு பெருந்தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், அந்நாட்டில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 30 லட்சத்தை நெருங்குகிறது.
அதேசமயம் பெருந்தொற்றுக்கு அதிகபட்சமாக பிரேசில் மற்றும் மெக்சிகோவில் 500-க்கும் மேற்பட்டோர் ஒரே நாளில் பலியாகியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் ஸ்பெயின், பிரான்ஸ், ஸ்வீடன் நாடுகளில் புதிதாக கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு பதிவாகவில்லை.
மொத்தமாக தொற்று பாதித்தவர்களில் 58ஆயிரம் பேர் கவலைக்கிடமாக உள்ள நிலையில், வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கையும் 65 லட்சத்தை தாண்டியுள்ளது. இது தவிர தென் ஆப்பிரிக்கா, மெக்சிகோ, ரஷ்யா, மெக்சிகோ நாடுகளிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.
உலக அளவில் 1.15கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு #coronavirus #covid19 #GlobalPandemic https://t.co/zPuXFOQkcf
— Polimer News (@polimernews) July 6, 2020
Comments