மூன்று மாதங்களுக்குப் பிறகு வங்கதேசத்துடன் வர்த்தகம் தொடக்கம்
மேற்கு வங்கத்தின் பெட்ராபோல்-பெனாபோல் எல்லை வழியாக இந்தியாவிற்கும் வங்கதேசத்திற்கும் இடையிலான வர்த்தகம் 3 மாதங்களுக்கு பிறகு நேற்று மீண்டும் தொடங்கியது.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பிறகு தேசிய எல்லைகள் மூடப்பட்டதால், அந்த வழியாக லாரிகள் இந்தியாவிற்குள் வர அனுமதி மறுக்கப்பட்டன.
தொடர்ந்து, ஜூன் 7ம் தேதி முதல் வங்கதேச வாகனங்கள் வர மத்திய அரசு அனுமதித்தாலும், கொரோனா முன்னெச்சரிக்கையாக மேற்குவங்க அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தால் போக்குவரத்து தடைபட்டு இருந்தது.
இந்நிலையில், இந்த எல்லை வழியான வர்த்தகத்திற்கு மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. இந்தியா - வங்கதேசத்திற்கு இடையிலான வர்த்தகத்தில் 70 சதவீதம் பெனாபோல்-பெட்ரபோல் நிலத் துறைமுகம் வாயிலாக நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
Comments