3 மாதங்களுக்குப் பிறகு திறக்கப்பட உள்ள தாஜ்மஹால்
உலகப் புகழ்பெற்ற சுற்றுலா சின்னமான தாஜ்மஹால் நாளை திறக்கப்பட உள்ள நிலையில், நாளொன்றுக்கு 5 ஆயிரம் பேர் மட்டுமே அதை காண அனுமதிக்கப்படுவார்கள் என தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.
பார்வையாளர்கள் அனைவரும் மாஸ்க் அணிவதுடன், தாஜ்மஹாலின் சுவர்களையோ தூண்களையோ தொடக்கூடாது என்றும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
உலகப்புகழ் பெற்ற முகலாயர் கால சினைவுச் சின்னங்களான ஆக்ரா கோட்டையும், டெல்லி செங்கோட்டையும் நாளை முதல் பார்வையாளர்களுக்காக திறக்கப்படுகிறது. இவை உள்ளிட்ட தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 820 பாரம்பரிய நினைவுச் சின்னங்கள் கொரோனாவால் மூடப்பட்டு 3 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் திறக்கப்படுகின்றன.
Comments