உ.பி.,யில் 8 போலீசாரை சுட்டுக் கொல்ல காரணமான ரவுடி விகாஸ் துபே தலைமறைவு
உத்தரப்பிரதேச மாநிலம் கான்புரில் ரவுடிகள் கும்பல் நடத்திய கொலைவெறித் தாக்குதலில் 8 போலீசார் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தையடுத்து ரவுடி கும்பலின் தலைவனான விகாஸ் துபேவின் வீட்டை போலீசார் இடித்து தள்ளினர்.
தலைமறைவாகி உள்ள அவனைத் தேடி வரும் போலீசார் நேற்று அவனது வீட்டை புல்டோசர்களைக் கொண்டு இடித்துத் தள்ளினர். விகாஸ் துபே மீது 60க்கும் மேற்பட்ட கொலை , கொள்ளை போன்ற கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
கான்புர் சம்பவத்தையடுத்து 36 மணி நேரத்துக்கும் மேலாக விகாஸ் துபே தலைமறைவாகிவிட்டான். விகாஸ் துபேயை பிடிக்க 25 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவனுடைய தாயே தமது மகனைப்பிடித்து, சுட்டுக் கொல்லுமாறு போலீசாரிடம் வேதனையுடன் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Comments