திரைப்பட இயக்குனர் ராம்கோபால் வர்மா மீது வழக்குப் பதிவு

0 3168

பிரபல திரைப்பட இயக்குனரும் தயாரிப்பாளருமான ராம்கோபால் வர்மா மீது தெலுங்கானா மாநிலத்தின் நல்கோண்டா போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ராம்கோபால் வர்மா, உண்மை சம்பவங்களின் அடிப்படையில் படங்களை இயக்குவதில் புகழ் பெற்றவர். அவர் புதிதாக இயக்கும் படம் மர்டர் கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற ஆணவக் கொலையை அடிப்படையாக கொண்டதாகும். அந்த சம்பவத்தில் கொல்லப்பட்ட இளைஞரின் தந்தை தமது மகனின் வாழ்க்கையை மையப்படுத்தி ராம் கோபால் வர்மா இயக்கிய படத்துக்குத் தடை கோரி நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.

திரைப்படம் வெளியானால் கொலை வழக்கின் விசாரணை பாதிக்கப்படும் என்றும் அவர் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து நீதிமன்ற உத்தரவின் பேரில் இயக்குனர் ராம்கோபால் வர்மா மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments