அமர்நாத் புனித யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்

0 1967

அமர்நாத் யாத்திரைக்கு நாள் ஒன்றுக்கு 500 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று ஜம்மு நிர்வாகம் தெரிவித்துள்ளது. நடப்பாண்டில் கொரோனா பரவல் காரணமாக அமர்நாத் யாத்திரை செல்பவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. யாத்திரை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட குழுவினர் நேற்று ஆலோசனை நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய, தலைமைச் செயலாளர் பி.வி.ஆர். சுப்பிரமணியம், யாத்திரை செல்லும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படும் எனத் தெரிவித்தார்.

மேலும் சாலை வழியாக நாள் ஒன்றுக்கு 500 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார். இந்நிலையில் பக்தர்களின் மனக்குறையைப் போக்கும் வகையில் தினசரி நடக்கும் பூஜைகள் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments