கொரோனாவைப் பரப்பியது சீனாதான் என்று டிரம்ப் மீண்டும் விமர்சனம்
கொரோனா விவகாரத்தில் சீனா ரகசியம் காத்தது, துரோகம் இழைத்தது, மூடி மறைக்கப் பார்த்தது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் விமர்சித்துள்ளார். இதனால் சீனாவை முழு அளவில் இதற்கு பொறுப்பேற்க வைக்க வேண்டும் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
சீனாவில் இருந்துதான் இந்த வைரஸ் உலகம் முழுவதும் பரவியது என்று குறிப்பிட்ட டிரம்ப், அமெரிக்கா தற்போது உள்நாட்டிலேயே முகக்கவசம், பாதுகாப்பு கவசம் மற்றும் மருத்துவ உபகரணங்களைத் தயாரித்து வருவதாக தெரிவித்தார். முன்பு இந்தப் பொருட்கள் எல்லாம் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டன என்பதையும் டிரம்ப் சுட்டிக் காட்டினார்.
US was doing great until it was hit by China's coronavirus: Donald Trump
— ANI Digital (@ani_digital) July 5, 2020
Read @ANI Story | https://t.co/OR6m87klb0 pic.twitter.com/5P3POttX6n
Comments