கனமழையால் மும்பையில் முடங்கிய இயல்பு வாழ்க்கை..!
மும்பையில் இரண்டாவது நாளாக நேற்றும் கனமழை பெய்ததால் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் போக்குவரத்து முடங்கியது. பல இருசக்கர வாகனங்களும் கார்களும் மழைநீரில் சிக்கி பழுதடைந்தன.
தாதர், கிங் சர்க்கிள், சியான், பரேல் உள்ளிட்ட நகரின் மையப்பகுதிகளிலும் மலாத், போரிவலி போன்ற புறநகர்ப்பகுதிகளிலும் கனமழை கொட்டித்தீர்த்தது.ஏராளமான மரங்கள், மின்கம்பங்கள், தொலைத்தொடர்பு சாதனங்கள் மழையால் சாய்ந்தன.
அடுத்த 48 மணி நேரத்துக்கு கன மழை நீடிக்கும் என்று மும்பை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பொதுமக்கள் வீடுகளில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு நாட்களாக பல மணி நேரம்இடைவிடாது பெய்த மழையால் மும்பை நகரின்இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. மும்பை புறநகர்ப் பகுதிகளில் 170 மில்லிமீட்டரும் தானேயில் 200 மில்லி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.
Comments