தமிழ்நாட்டில் இன்று 4280 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது
தமிழகத்தில் ஒரே நாளில் 4 ஆயிரத்து 280 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி, கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 7 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. 3ஆவது நாளாக 4 ஆயிரம் பேர் வீதம், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நீடித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் உயிர்ப்பலியும் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.
அந்த வகையில், தமிழ்நாட்டுக்கு வெளிநாடுகளில் இருந்து வந்த 10 பேர், வெளிமாநிலங் களில் இருந்து வந்த 90 பேர் உள்பட புதிதாக 4 ஆயிரத்து 280 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 7 ஆயிரத்தை தாண்டி விட்டது.
கடந்த 24 மணி நேரத்தில் 36 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதனால் பரிசோதனைகளின்
எண்ணிக்கை, 13 லட்சத்து 7 ஆயிரத்தை எட்டி உள்ளது.
சென்னையில் 37 பேர் உள்பட தமிழகம் முழுவதும் ஒரே நாளில் 65 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்தனர். சென்னையைச்சேர்ந்த 29 வயது இளைஞர், 15 பெண்கள் உள்பட 47 பேர் பல்வேறு அரசு மருத்துவ மனைகளில் மரணம் அடைந்தனர். தனியார் மருத்துவமனைகளில் 3 பெண்கள் உள்பட 18 பேர், பலியானார்கள். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிர்ப்பலி ஆயிரத்து 450 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட சுமார் 45 ஆயிரம் பேர், பல்வேறு மருத்துவமனை களில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில், 2 ஆயிரத்து 214 பேர் டிஸ்சார்ஜ் செய்யப் பட்டனர். எனவே, குணம் அடைந்து வீடு திரும்பி யோரின் எண்ணிக்கை 60 ஆயிரத்தை தாண்டி உள்ளது.
தமிழகத்தில், அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் தொற்று பதிவாகி இருந்தது.
நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு உயர்ந்து வரும் நிலையில், தமிழகத் தில் அனைத்து மாவட்டங்களிலும் வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளது. சென்னையில் புதிதாக ஆயிரத்து 842 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி, பாதிப்பு எண்ணிக்கை 66 ஆயிரத்தைத் தாண்டி விட்டது. அண்டை மாவட்டங்களான செங்கல் பட்டில் புதிதாக 215 பேரும், திருவள்ளூரில் 251 பேரும், காஞ்சி புரத்தில் 134 பேரும் கொரோனாவால் பாதிக்கப் பட்டு உள்ளனர்.
மதுரையில் 352, திருவண்ணாமலையில் 173, ராமநாத புரத்தில் 149, ராணிப்பேட்டையில் 104, விருதுநகரில் 100, வேலூரில் 85, திருச்சியில் 83, சேலத்தில் 70, கன்னியாகுமரியில் 69, தூத்துக்குடியில் 64, நெல்லையில் 61 பேருக்கும் வைரஸ் தொற்று உறுதி ஆனது. சென் னையை ஒப்பிடும் போது, பிற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உயர்ந்திருந்தது. கொரோனாவுக்கு உயிரிழந்த ஆயிரத்து 450 பேரில், ஆயிரத்து 33 பேர், சென்னையை ச் சேர்ந்தவர்கள் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
#TN #COVID19 Update:
— National Health Mission - Tamil Nadu (@NHM_TN) July 4, 2020
Cases Today/Total - 4280/1,07,001
Active - 44,956
Discharged Today/Total - 2214/60,592
Death Today/Total - 65/1450
Samples Tested Today/Total - 36,164/13,06,884
For more info visit https://t.co/YJxHMQexUK@CMOTamilNadu @Vijayabaskarofl @MoHFW_INDIA
Comments