'உலகிலேயே மிகப் பெரிய ராணுவம். ஆனால்?' - முடிவே இல்லாத சீனப் படை வீரர்களின் ஏக்கம்!
ஜூன் 22 - ம் தேதி சீன வெளியுறவுத் துறையின் செய்தித் தொடர்பாளர் சுயோ லிஜியன் வழக்கம் போல செய்தியாளர்களைச் ந்தித்தார். அப்போது பத்திரிக்கையாளர்கள், “கால்வன் பள்ளத்தாக்கில் இந்தியப் படையுடன் நடைபெற்ற மோதலில் எத்தனை சீன ராணுவ வீரர்கள் இறந்தனர்?” என்ற கேள்வியை எழுப்பினர். இந்த கேள்விக்கு பதிலளிக்க விரும்பாத அவர், “உங்களுக்கு என்னிடம் எந்தவித தகவல்களும் இல்லை” என்று அலட்சியமாக பதில் அளித்தார். அடுத்த நாள் ஜூன் 23 - ம் தேதி நடைபெற்ற பத்திரிக்கையாளர்கள் சந்திப்பிலும் இதே போன்ற கேள்வி எழுப்பட்டது. அப்போது இந்தக் கேள்வியையே அவர் தவிர்த்துவிட்டார். இந்திய ஊடகங்கள் 40 - க்கும் மேற்பட்ட சீன வீரர்கள் இறந்ததாகத் தகவல் வெளியிடுகின்றனவே என்று கேள்வி கேட்டபோது, “தவறான தகவல்” என்று மட்டும் பதில் சொன்னார்
கல்வான் மோதலில் இதுவரை சீனாவில் எத்தனை பேர் காயம்பட்டனர், எத்தனை பேர் இறந்தனர் என்பது குறித்து எந்தவித தகவலையும் சீன ராணுவம் வெளியிடவில்லை. ஆனால், இந்தியாவில் நடந்ததோ இதற்கு நேர் எதிரானது. மோதலில் வீர மரணம் அடைந்த வீரர்களின் பெயர் விவரம அறிவிக்கப்பட்டு அவர்களின் உயிர்த்தியாகம் கௌரவிக்கப்பட்டது- வீர மரணமடைந்தவர்களின் குடும்பத்துக்கும் உரிய நிவாரணம் மத்திய மற்றும் மாநில அரசுகள் தரப்பில் வழங்கப்பட்டது.
சீனாவுக்கும் இந்தியாவுக்கும் உள்ள அடிப்படை வித்தியாசம் இதுதான்!
ராணுவ வீரர்களின் தியாகத்துக்கு மதிப்பளிக்காமல், இறுதி மரியாதையைக்கூடச் செலுத்தாத நாடு எது? என்ற கேள்வி எழுப்பப்பட்டால், அதற்கு பதிலாக சீனாவை சொல்லலாம் என்று அந்த நாட்டில் விமர்சனம் எழுந்துள்ளது.
எல்லையில் நடைபெற்ற மோதலில் சீனா தரப்பிலும் உயிரிழப்பு ஏற்பட்டது. எதிரிப் படையில் ஏற்பட்ட உயிர் இழப்பை விடவும் அதிக எண்ணிக்கையில் நம் வீரர்கள் இநந்தனர் என்பதை வெளியில் கூறினால், அது தங்கள் நாட்டில் மிகப்பெரிய பிரச்னையை ஏற்படுத்தும். அமைதியின்மையை உருவாக்கி சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அரசையே அசைத்துப் பார்த்துவிடும் என்ற அச்சத்தில் சீன அரசு உள்ளது இதன் காரணமாகவே இந்த விஷயத்தில் சீன ராணுவம் மௌனம் காத்துள்ளது.
இப்போது மட்டும்ல்ல, கடந்த காலத்தில் நடைபெற்ற வியட்நாம் போர், கொரியப் போர் ஆகியவற்றில் கலந்து கொண்ட சீன வீரர்களுக்கும் இதே நிலைதான்.போரில் கலந்துகொண்ட வீரர்கள் ஒய்வு பெற்ற பிறகோ அல்லது காயம்பட்டு படையிலிருந்து லிலகினாலோ நல்ல முறையிலான மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுவதில்லை. அவர்களுக்கு கிடைக்க வேண்டிய ஓய்வூதியம், வேலை வாய்ப்பு அளிப்பதிலும் சீன அரசு கவனம் செலுத்துவதில்லை என்கிற குற்றச்சாட்டு உண்டு. உலகின் மிகப்பெரிய ராணுவத்தை வைத்திருக்கும் சீன அரசு , போர் வீரர்களுக்குரிய பென்சன் உள்ளிட்ட ஓய்வூதிய பலன்கள் அளிப்பதற்காக தேசிய அமைப்பு போன்ற நிறுவனத்தையும் கூட இதுவரை உருவாக்கவில்லை. ஓய்வுபெற்ற மற்றும் காயம்பட்ட முன்னாள் ராணுவ வீரர்கள்உள்ளுர் அரசு அதிகாரிகளையே பென்சன், மருத்துவ உதவி உள்ளிட்ட பலன்கள் கிடைக்க சார்ந்திருக்க வேண்டிய நிலைமை உள்ளது . அரசு அதிகாரிகள் மூலம் சிலருக்கு உதவிகள் கிடைக்கின்றன. பலர் எந்தவித உதவியையும் பெற முடியாமல் தவிக்கிறார்கள். இதிலும் மிகப்பெரிய அளவில் ஊழல்கள் நடைபெறுவதாகவும் சொல்லப்படுகிறது.
எல்லைப் பகுதியில் ரத்தம் சிந்த போர் புரிந்து, உடல் உறுப்புகளை இழந்து, இளமைப் பருவம் முழுவதையும் நாட்டுக்காகச் செலவழித்த பிறகு, முதுமைக் காலத்தில் அரசாலும் புறக்கணிக்கப்பட்டு, உள்ளூர் ஊழல் அதிகாரிகளிடம் கெஞ்சவேண்டிய நிலையே சீன முன்னாள் ராணுவ வீரர்கள் உள்ளனர் என்பதே நிதர்சனமான உண்மை. அதாவது, பொதி சுமக்கும் கழுதை வயதான பிறகு புறக்கணிப்பது போல , ஓய்வக்கு பிறகு அவர்கள் மேல் சீன அரசு எந்த அக்கறையும் காட்டுவதில்லை. இதனால், முன்னாள் ராணுவ வீரர்கள் போராட்டத்திலும் ஈடுபட்டது உண்டு . எச்சரிக்கையடைந்த சீன அரசு, 2018 - ஏப்ரல் மாதத்தில் தான் சீன அரசு முன்னாள் ராணுவ வீரர்களின் நலன் கருதி தனி அமைச்சகத்தை ஏற்படுத்தியது. இப்போது,முன்னாள் ராணுவத்தினர் போராட்டத்தில் ஈடுபட தடையும் உள்ளது. முன்னாள் ராணுவ வீரர்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றனர். கிடைக்க வேண்டிய உரிமைகள் குறித்துப் போராடிய வீரர்கள் அடக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டு, மர்மமான முறையில் கொல்லப்பட்டனர். போர் வீரர்கள் குறித்த செய்திகள் சீன ஊடகங்களில் தணிக்கை செய்யப்பட்ட பிறகே வெளியிடப்படுகின்றன. நாட்டுக்காகப் போரிட்ட ராணுவ வீரர்களின் குரவளை இந்த கம்யூனிஸ்ட் நாட்டில் நெறிக்கப்படுகிறது. .
கல்வான் பள்ளத்தாக்கு சம்பவத்தில் இறந்த வீரர்களின் எண்ணிக்கை கூட வெளியிடப்படாமல் ராணுவ வீரர்களின் வீரமும், அவர்களின் தியாகங்களும் இருட்டடிப்பு செய்யப்படுகின்றன என்ற எண்ணம் சீன ராணுவ வீரர்கள் மத்தியிலும் உருவாகியுள்ளதாம். இந்த எதிர்மறை எண்ணமானது சீன கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரும் மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவரான ஜின்பிங்குக்கு மிகப்பெரிய சரிவை ஏற்படுத்தக் கூடும் என்றும் நிபுணர்கள் சொல்கிறார்கள்.
அதனால் , இந்தியா போன்ற நாடுகளிடத்தில் வீரத்தை காட்டுவதை விட்டு விட்டு, தங்கள் ராணுவ வீரர்களுக்கு உரிய மரியாதையை அளிப்பதில் அக்கறை காட்ட வேண்டுமென்ற குரல் சீன நாட்டில் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ளது.
Comments