செரினா செம ஃபிட் ; மகள் சோ ...க்யூட்! - கலக்கும் புகைப்படம்

0 7819

அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ் தன் மகளுடன் டென்னிஸ் களத்தில் இருப்பது போன்ற புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தை கலக்கி வருகிறது.

பிரபல டென்னிஸ் நட்சத்திரம் செரினா வில்லியம்ஸ் 23- முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் பெற்றவர். இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். செரினாவுக்கு இரண்டரை வயதில் ஒலிம்பியா என்ற மகள் உள்ளார். தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகள் ஒலிம்பியாவுடன் செரினா டென்னிஸ் பயிற்சியில் ஈடுபடுவது போன்ற புகைப்படங்களை செரினா வில்லியம்ஸ் பதிவிட்டுள்ளார். செரினா போன்றே உடை அணிந்து அவரின் மகளும் டென்னிஸ் களத்தில் இருக்கிறார். புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், ஒலிம்பியாவும் தாயின் பாதையை பின்பற்றி டென்னிஸ் வீராங்கனையாக உருவெடுப்பார் என்று வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.image

கடந்த ஜனவரி மாதத்தில் செரினா இன்ஸ்டாகிராமில் மகளுடன் இருப்பது போன்ற புகைப்படத்தை பதிவிட்டார். அதில்,''இந்த புகைப்படத்தை எடுத்தது யாரென்று எனக்கு தெரியாது. ஆனால், ஒரு அம்மாவாக இருப்பது என்பது எளிதான‘ காரியம் இல்லை. இந்த குழந்தைக்கு நான் தாய் என்பதில் பெருமையடைகிறேன் '' என்று குறிப்பிட்டிருந்தார்.

கடந்த 2017-ம் ஆண்டு செரினா வில்லியம்ஸ் தொழிலதிபர் அலெக்ஸிஸ் ஓஹானியேனை திருமணம் செய்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments