CA தேர்வு ரத்து - ஐசிஏஐ அறிவிப்பு

0 7860

மே மாதம் நடத்தத் திட்டமிட்டு ஒத்தி வைக்கப்பட்ட சிஏ தேர்வு ரத்து செய்ய ப்பட்டுள்ளது.

இந்தியப் பட்டயக் கணக்காளர்களுக்கான நிறுவனம் ஆண்டுக்கு இருமுறை பட்டயக் கணக்காளர்களுக்கான தேர்வை நடத்துகிறது. மே மாதம் நடைபெற இருந்த தேர்வு ஊரடங்கால் ஒத்தி வைக்கப்பட்டு ஜூலை 29 முதல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஜூலை இறுதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் இந்தத் தேர்வை ரத்து செய்வதாக ஐசிஏஐ அறிவித்துள்ளது.

இந்தத் தேர்வை எழுத விண்ணப்பித்து இருப்பவர்கள், நவம்பரில் நடைபெறும் தேர்வுடன் சேர்த்து எழுதிக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களைத் தேர்வர்கள் www.icai.org என்கிற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments