காவல் ஆய்வாளர் ஸ்ரீதருக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை - அமைச்சர் கடம்பூர் ராஜு
சாத்தான்குளத்தில் காவல் ஆய்வாளராக இருந்த ஸ்ரீதருக்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை எனச் செய்தி விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் செக்காரக்குடியில் கழிவுநீர்த் தொட்டியைத் தூய்மை செய்தபோது நச்சுவாயு தாக்கி உயிரிழந்த 4 பேரின் குடும்பங்களுக்குத் தலா 10 லட்சம் ரூபாய் நிதி வழங்கும் நிகழ்ச்சி திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, ராஜலட்சுமி ஆகியோர் காசோலைகளை வழங்கினர்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜு, சாத்தான்குளத்தில் காவல் ஆய்வாளராக இருந்த ஸ்ரீதருக்கும் தனக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை எனத் தெரிவித்தார். சாத்தான்குளம் விவகாரத்தில் அரசியல் தலையீடு இல்லை என சிபிசிஐடி ஐஜி விளக்கமளித்துள்ளதாகவும் கடம்பூர் ராஜு குறிப்பிட்டார்.
Comments