அமெரிக்காவின் வணிகவளாகத்தில் மர்மநபர்கள் துப்பாக்கிச்சூடு; 8 வயது சிறுவன் பலி

0 2389

அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தில் வணிக வாளகம் ஒன்றில் மர்மநபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 8 வயது சிறுவன் உயிரிழந்தான்.

ரிவர்சேஸ் கேலரியா ஷாப்பிங் மாலில் பிற்பகல் நேரத்தில் நடந்த தாக்குதலில் ஒரு சிறுமி உள்பட 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

புட் கோர்ட் அருகே வெவ்வேறு திசைகளில் இருந்து துப்பாக்கியால் சுடும் சத்தத்தை கேட்டதாக சம்பவ இடத்தில் இருந்தவர்கள் தெரிவித்துள்ள நிலையில், தாக்குதல் நடத்தியவர்கள் மற்றும் அதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments